சீர்காழி அடுத்த மணிக்கிராமம் கிராமத்தில் மழை, வெள்ள நிவாரணம் ரூ.1,000 வழங்கல்

சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேலும் நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சீர்காழியை அடுத்த மணிக்கிராமம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும்  எம்.எல்.ஏ.,க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.1,000 வழங்கினார். அதை தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி நியாய விலை கடையில் நிவாரண உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வெண்ணிலா தென்னரசு, கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 − 71 =