சீனாவில் ஒரே நாளில் 31,000 பேருக்கு கொரோனா பாதிப்பு: கடும் கட்டுப்பாடுகளால் மக்கள் அவதி!

சீனாவில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதித்த பகுதிகளில் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் ஆவேசம் அடைந்த மக்கள் அதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து, 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில், 25 ஆயிரத்து, 517 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியானது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் சீனாவில் அண்மைக்காலத்தில் மிக அதிகமாக ஒரு நாள் பாதிப்பு தற்போது பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜீரோ கோவிட் என்ற இலக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், கொரோனா வீரியம் குறைந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவில் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 + = 41