சி.வி.எம்.அண்ணாமலை 106வது பிறந்த நாள் காஞ்சிபுரத்தில் இலவச மருத்துவ முகாம்

காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகியாக இருந்தவரும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சருமான சி.வி.எம்., அண்ணாமலையின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் மேல்நிலை பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

வானகரம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, காஞ்சிபுரம் லைஃப் கேர் மருத்துவமனை, காஞ்சிபுரம் குமார்ஸ் கண் சிகிச்சை மையம்  இணைந்து காஞ்சிபுரம் சி.வி.எம். அண்ணாமலை அறக்கட்டளை சார்பில்,  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,வுமான க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., எழிலரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு, ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே, நுரையீரல் பரிசோதனை, கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.

முகாமில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், தி.மு.க., மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 8 =