சிவசேனா சின்னம் முடக்கம்: உத்தவ் தாக்கரே மனு தள்ளுபடி

சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக அக்கட்சியின் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். உத்தவ் தாக்கரே சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், மனுதாரரின் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பளிக்காமல் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என வாதிட்டார். மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் ராஜு நய்யர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட், கட்சியின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக சிவசேனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், இருதரப்பினரின் நலன் கருதி நிலுவையில் உள்ள விவகாரத்துக்கு விரைந்து தீர்வுகாணவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.

மராட்டியத்தில் சிவசேனா சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சித் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

70 − 67 =