சிவகார்த்திகேயனின் ’டான்’ புகைப்படங்கள் வெளியீடு : ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 படங்களிலும் ட்ரெண்டிங்கில் உலகளவில் உள்ளது.

அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ’டான்’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.

லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளப் புகைப்படங்களில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யாஉள்ளிட்டவர்களின் கதாப்பாத்திரங்களை வெளிப்படுத்தும் கெட்டப்புகளுடன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.கல்லூரி மாணவர்களாக சிவகார்த்திகேயன், பிரியங்கா, சிவாங்கி,பால சரவணன், கல்லூரி பேராசிரியராக எஸ்.ஜே சூர்யா, சிவகார்த்திகேயனின் அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்கள் என்பதை புகைப்படங்கள் உணர்த்துகின்றன. இந்தப் புகைப்படங்களை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

43 + = 50