சிவகங்கை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபர் வெட்டி கொலை

சிவகங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் வீடு புகுந்தது வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை டி. புதூரைச் சேர்ந்தவர் ராகவானந்தம். இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராகவானந்தத்தை அறிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர். ராகவனந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பது அறிந்து, சிவகங்கை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பிய நபர்களை பிடிக்கவும், கொலைகான காரணத்தை அறியவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

94 − 91 =