சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே திருப்பத்தூரில் இருந்து ஜல்லி கற்கல் ஏற்றி வந்த லாரி நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்ற கொண்டிருந்த கார் மீது கவிழ்ந்ததில் பெண் மருத்துவர் பரிதாபமாக பலியானர்.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் என்ற இடத்தில் நாட்டரசன்கோட்டையில் இருந்து மதுரையை சேர்ந்த பெண் மருத்துவரான இந்திரா காரை சிவகங்கை நோக்கி ஒட்டி கொண்டு சென்றுள்ளார். இதே போல் திருப்பத்துரில் இருந்து சிவகங்கை நோக்கி ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி முன்னோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது கவிழ்ந்தில் கார் டிப்பர் லாரி அடியில் சிக்கி கொண்டது. அங்கிருந்த பொது மக்கள் ஒன்றுகூடி முயன்றும் காரை வெளியில் கொண்டு வர முடியவில்லை இதில் காரை ஒட்டி வந்த மருத்துவர் இந்திரா உள்ளே சிக்கி பலியானர்.பின்னர் ஜேசிபி இயந்திரம் முலம் காரை வெளியில் கொண்டு வந்தனர் இதனால் மானாமதுரை தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் 1மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மதகுபட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் லாரி ஓட்டுநர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
