சிறை கைதியை ஜாமீனில் எடுக்க விஏஓ கையெழுத்தை போலியாக பதிவிட்ட மூவர் சிறையில் அடைப்பு

புதுக்கோட்டையில் சிறையில் உள்ள ஒருக்கு ஜாமீன் பெற நீதிமன்றத்தில் போலி விஏஓ கையெழுத்திட்ட சான்றிதழ்களை சமர்ப்பித்த சம்பவத்தில் மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

புதுக்கோட்டையைச் சேர்ந்த சின்னையா என்பவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவருக்கு ஜாமீன் கோரி புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் தமிழ்மணி என்பவர்கள் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த இரு ஜமீன்தார்களின் பிராமண பத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த விஏஓ சான்றிதழ்கள் போலியாக தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதை அறிந்த நீதிபதி, இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க நீதிமன்றம் பணியாளருக்கு உத்தரவிட்டார்.இதனையடுத்து நீதிமன்ற தலைமை எழுத்தர் நாகரத்தினம் விஏஓ கையெழுத்தை போலியாக பதிவிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குணசேகரன் மற்றும் தமிழ்மணி மீது புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது இந்த போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்தது காந்தி நகரைச் சேர்ந்த அபூர்வம் என்ற பெண்மணி என்பது தெரியவந்தது.இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.புதுக்கோட்டையில் விஏஒ கையெழுத்தை போலியாக பதிவிட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 50 = 55