சிறைக் கைதிகளை குடும்பத்தினர் நேரடியாக சந்திக்கலாம் – சிறைத்துறை டிஜிபி

சிறைக் கைதிகளை குடும்பத்தினர் நேரடியாக சந்திக்கும் முறை மீண்டும் வரும் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் தெரிவித்துள்ளார்.

 கொரோனா இரண்டாம் அலை பரவலால் சிறைக் கைதிகளை காண உறவினர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தீவிர கொரோனா கட்டுப்பாடுகளுடன் அந்த நடைமுறை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

 சிறைக் கைதிகளை காண வரும் நபர்கள் முன்பதிவு செய்துவிட்டு, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரம் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி. பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + = 15