சிறந்த ஆசிரியர்களாக இடையறாத வாசிப்பு அவசியம் கல்லூரி விழாவில் பேரா.சா.விஸ்வநாதன்

பொம்மாடி மலை, பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 16 ஆம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு பொன்மாரி கல்வி நிறுவனங்களின் தலைவர் சேகர் தலைமை வகித்தார். புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர் பேரா.சா.விஸ்வநாதன், தனது உரையில்:

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் உள்ள யுனெஸ்கோ 21ஆம் நூற்றாண்டுக்கான கல்வித்தூண்கள் என்று நான்கைச் சொல்லியிருக்கிறது. அது “அறிந்து கொள்ள கற்றல், கற்பதற்குக் கற்றல், தானாக இருக்கக் கற்றல், சேர்ந்து வாழக்கற்றல்.” இவற்றைக் கற்கும் நீங்கள், எதிர்காலத்தில் நீங்கள் சந்திக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். புதிய, புதிய செய்திகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சொல்லவேண்டும் என்றால் ஆசிரியர்கள் நன்கு புதிய செய்திகளை அறிந்திருக்கவேண்டும். அதற்கு இடையறாத வாசிப்பு அவசியம். அதில் தினந்தோறும் செய்தித்தாள் வாசிப்பு ஒன்று. செய்தித்தாள் வாசிப்பின் மூலமே புதிய செய்திகளை அறிய முடியும். பாட புத்தகங்களில் இருப்பது மட்டுமே மாணவர்களுக்கு பயன்படாது. அதற்குமேல் கூடுதலாக அறிய ஆசிரியர்கள் அவர்களின் கூடுதல் வாசிப்பின் மூலம் மாணவர்களின் அறிவை மேம்படுத்த முடியும். புத்தக வாசிப்புதான் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியதாக காந்தி,கலாம் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்கள். வாசிக்கின்றவற்றை குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கத்தையும் ஆசிரியர்கள் தவறாது மேற்கொள்ள வேண்டும். அதன்மூலம் மாணவர்களுக்கு புதிய செய்தியை தொடர்ந்து சொல்லமுடியும். புதிய தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் வேண்டும். அதுஆசிரியர்களுக்கு மட்டுமல்ல அவர் முன் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கும் பயன்படும்.

ஆசிரியர்கள் நல்ல மாணாக்கர்களை  உருவாக்க முதலில் தங்களைக் கற்றவர்களாக்கிக் கொள்ள வேண்டும். அது நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் என்றார்.பொன்மாரிக்கல்விநிறுவனங்களின் செயலர் மு.ராமுக்கண்ணு , பொன்மாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெயராணி ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக பொன்மாரி கல்வியியல் கல்லூரி முதல்வர்,முனைவர் வீ.உமா அனைவரையும் வரவேற்றார். நிறைவாக கல்வியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் செ. ராஜலிங்கம் நன்றி கூறினார். உதவிப் பேராசிரியர் கா. மாரிமுத்து நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 + = 80