சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுதேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுதேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியானது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக என மத்திய அரசு அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து, மாநிலங்களுக்கான பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் உள்மதிபபீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு இணையதளத்தில் வெளியாகும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.gov.in என்ற இணையதளத்தில் அல்லது Digilocker, Umang செயலிகள் மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் கூறியுள்ளது.

முன்னதாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 30ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.