சின்னம்பேடு ஊராட்சி மக்கள் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சியில் தனி நபருக்கு சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் விவசாய நிலம் ஆதிதிராவிட ஆரம்ப பள்ளி அருகே உள்ளது. இதில், 30 சென்ட் நிலத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவர் விற்று விட்டார்.

நிலத்தை வாங்கிய நபர் அந்நிலத்தை வருவாய் துறையை சேர்ந்த சர்வேயர் மற்றும் ஆரணி காவல் நிலைய போலீசாருடன் வந்து நிலத்தை அளந்து கல்பதிக்க முயன்றார். ஆனால், நிலத்தை விற்பனை செய்தவர் தற்போது இந்நிலத்தில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. எனவே நெல் அறுவடை முடிந்த பின்னர் நிலத்தை அளந்து கொள்ளுங்கள். கல் பதிக்கும் பணியை சற்று காலதாமதம் செய்யுங்கள் என்று வலியுறுத்தினார். ஆனால், அதற்கு வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் ஒத்துக் கொள்ளவில்லை. இதையறிந்ததும் கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு நெற்பயிர் சேதமாவதை தடுக்க கல் பதிக்கும் பணியை அறுவடைக்குப் பின்னர் செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்வதறியாது வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

85 − 83 =