
சிந்தை தெளிவிக்கும் சிவபுராணம் என்கிற தலைப்பில், ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட் ஆலை வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில், சமய சொற்பொழிவு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, ஆலத்தியூர் கிராமத்தில், ராம்கோ சிமெண்ட் ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள, ஸ்ரீ மகா கணபதி ஆலய வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை, சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் உற்சவர் உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதையொட்டி கோயில் வளாகத்தில் நாள்தோறும், சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
கடந்த 13ஆம் தேதி மாலையில், விநாயக பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து, அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த, ஓய்வு பெற்ற மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் புலவர் சி.இளங்கோ, சிந்தை தெளிவிக்கும் சிவபுராணம் என்கிற தலைப்பில், சமய சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் அமைப்பு செயலாளர் நல்லப்பன் ஆசிரியர், மற்றும் ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட் ஆலையில் பணியாற்றும் அலுவலர்கள், ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.