சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் பதவியேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் பதவி ஏற்றார்.

இவர் இதற்கு முன்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை துறையில் தலைவராகவும் மற்றும் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் உள்ள துணைவேந்தர் அலுவலகத்தில் ஆர்.எம்.கதிரேசன் பதவி ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் ரா.ஞானதேவன், தேர்வுக் கட்டுபாட்டு அதிகாரி வி.செல்வநாராயணன், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநகர் சிங்காரவேலன், மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தின சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு புதிய துணைவேந்தருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பல்கலைக்கழக புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், அனைத்துப் பிரிவு இயக்குநர்கள், அதிகாரிகள், நிதி அலுவலர்கள், ஊழியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 − = 37