சிட்லபாக்கம் – மாடம்பாக்கம் மினி பஸ் துவக்கம்

சிட்லபாக்கம், மாடம்பாக்கம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ., ராஜா மினி பஸ்ஸை துவக்கி வைத்தார்.

சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பொது மக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று மீண்டும் எஸ்-3   குரோம்பேட்டை முதல் சிட்லபாக்கம் வழியாக மாடம்பாக்கம் ஜோதிநகர் வரையிலும்,  ஏ-5,  தி.நகர் முதல் மாடம்பாக்கம் பாலாஜி நகர் வரையிலும் மினி பஸ் விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தாம்பரம் மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா துவக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார்.

இந்நிகழ்வில், தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப், மாநகர போகுவரத்து உயரதிகாரிகள், சிட்லபாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா உள்பட குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 62 = 67