சிஎஸ்கே அணி வீரர்கள் சிலர் தோனியுடன் சென்னை வந்தனர் : நெருங்கும் ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னைக்கு அணி வீரர்களுடன் வந்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ். தோனி.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் சிலர் தோனியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தோனி தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். தோனியை காண சென்னை விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

இந்நிலையில் தோனி உள்ளிட்ட சில வீரர்கள் சென்னையில் இருந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஐக்கிய அமீரகம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு முறைகள் ஆகியவை பின்பற்றப்பட இருப்பதால் அமீரகத்துக்கு முன்னதாகவே புறப்பட்டு பயிற்சியை தொடங்க இருக்கிறது சிஎஸ்கே அணி.

அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் டாப் நான்கு இடங்களை பிடித்துள்ளன.