தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை இந்து நாடார் உறவின் முறை கமிட்டி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நடுநிலைப் பள்ளியில் 28-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் கணேசன் தலைமை வகித்தார். நாடார் மஹாஜன சங்க தென் மண்டல செயலாளர் மதன் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உறவின் முறைகள் கூட்டமைப்பு தலைவர் அகரக்கட்டு லூர்து, நாடார் மஹாஜன சங்க இணைச் செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் குறிச்சி மகேஷ், மாவட்டத் தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ மாணவிகளுக்கு லூர்து, விவேகானந்தன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆனந்த் காசிராஜன், பொருளாளர் சுப்பிரமணியன், லட்சுமணன் காளியப்பன், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.