சாமல்பட்டி அருகே சென்னையை சேர்ந்த பட்டய கணக்கர் கொலை செய்து புதைப்பு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி கோள்ளப்பட்டி மாந்தோப்பில் பணப்பிரச்சனை காரணமாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த பட்டயகணக்கர் (ஆடிட்டர்) கொலை செய்து புதைப்பு, சாமல்பட்டி போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோள்ளப்பட்டி கிராமத்தில், சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஜனா ரஞ்சன் பிரதான்(48).பட்டய கணக்கர் கொலை செய்யப்பட்டு மாந்தோப்பில் புதைக்கப்பட்டுள்ளார்.

 இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 26 ஆம் தேதி சென்னை வேளச்சேரியை சேர்ந்த பட்டயகணக்கர் ஆடிட்டர் ஜனா ரஞ்சன் பிரதான், தொழில் நிமிர்த்தமாக வாடிக்கையாளர் ஒருவரை பார்க்க வேலூர் சென்று வருவதாக மனைவி பூர்ணிமாவிடம் கூறிச் சென்றுள்ளார், அன்று இரவு 10 மணிக்கு அவரது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தான் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியில் உள்ள கிரானைட் குவாரில் இன்ஸ்பெக்சன் செய்ய வந்து உள்ளதாகவும் தன்னுடன் தனது நண்பர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் சபரீசன் மற்றும் சிலருடன் உள்ளதாக கூறியுள்ளார்.

மீண்டும் இருபத்தி ஏழாம் தேதி காலை 10 மணி அளவில் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, தொடர்புகொள்ள முடியவில்லை எனவும், அவரது நண்பர்களை தொடர்பு கொண்ட போது சரியான பதில் தரவில்லை என கூறியுள்ளார்.

 தனது கணவரின் நண்பரான வழக்குரைஞர் பாலாஜி என்பவரிடமிருந்து ஷிப்ட் கார் இரவல் பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் காரில் உள்ள ஜிபிஎஸ் கருவி கொண்டு அமைவிடத்தை பார்த்தபோது , கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் மற்றும் ஆர்.கே.புரம் பாரதி நகரில் கடைசியாக கார் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது சம்பந்தமாக இரண்டு நாட்கள் தேடிப் பார்த்ததில் எங்கும் கணவர் கிடைக்கவில்லை எனக் கூறி பட்டயகணக்கர் மனைவி பூர்ணிமா, கிருஷ்ணகுமார் மற்றும் சபரிஷ் ஆகிய இருவர் மீதும் சந்தேகம் உள்ளது என கூறி, தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும், தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கூறியும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியை சேர்ந்த திருமால் என்பவரை பிடித்து விசாரித்ததில், கோள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் புதைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார், அதனை தொடர்ந்து அவரை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜேஸ்வி , நேரில் அழைத்துவந்து புதைக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டார்.

ஊத்தங்கரை வட்டாட்சியர் தெய்வநாயகி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு, காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஊத்தங்கரை அலேக்சாண்டர், பர்கூர் தங்கவேல், தேன்கனிக்கோட்டை கிருத்திகா, சாமல்பட்டி காவல் ஆய்வாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இது குறித்து சாமல்பட்டி காவல் ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இந்த வழக்கில் தொடர்புடைய திருமால் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.