சாந்தநாதபுரம் ஸ்ரீ சாந்தநாத விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிறு அன்று கோலாகலம்!

புதுக்கோட்டை டவுன் சாந்தநாதபுரம் இரண்டாம் வீதி ஸ்ரீ சாந்தநாத விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக அமைச்சர்கள், ஆன்மீக அன்பர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் சாந்தநாதபுரம் இரண்டாம் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சாந்தநாத விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நவம்பர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் முன்னிலையில் விமரிசையாக நடைபெற இருக்கின்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை காலை 9.30 மணி முதல் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணி வரை நடைபெற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் அறுசுவை அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை சாந்தநாதபுரம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதுக்கோட்டை நகர தி.மு.க., செயலாளர் செந்தில், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 1 = 2