சாதி மோதல் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் எஸ்.பி.,  அலுவலகத்தில் மக்கள் மனுஅளிப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகிலுள்ள கொல்லன்கோவில் கிராம கமிட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கவேல் (வயது62) தலைமையில், ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கொல்லன்கோவில் கந்தசாமிபாளையத்தில் கடந்த 6ம் தேதி, லேத் பட்டறை உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் கல்லூரி மாணவர் ஹரிசங்கர் (17) ஆகியோர் கவுரிசங்கர் என்பவர் வீட்டில் சிமெண்ட் அட்டை மாட்டிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக ஹரிசங்கர் தவறி கீழே விழுந்து இறந்தார்.

இச்சம்பவத்தால், ஹரிசங்கரின் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், எங்கள் கிராமத்தில் சாதி மோதல்களை தூண்டிவிடும் செயல்களையும், உள்ளூர் மக்களை திசை திருப்பி சமூக விரோத செயல்கள் மூலம் பணம் பறிக்கவும், பொய் வழக்கு தொடுத்தும் வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த 6ம் தேதி சமூக விரோதிகள் சிலர் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மறுநாளான 7ம்தேதி இரவு 8.30 மணிக்கு மீண்டும் ஒரு கும்பல் வந்து தாக்குதலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக ராஜ்குமாரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி சிவகிரி போலீஸ் நிலையத்தில், கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

இப்புகார் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், சம்மந்தப்பட்ட 8-க்கும் மேற்பட்ட நபர்கள் இதற்கு முன் எங்களது கிராமத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, எங்கள் கிராமத்தில் பொது அமைதியை சீர் குலைத்து, சாதி மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது கிராமத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2