சரஸ்வதி பூஜை விழாவில் பள்ளிக்கு வருகை தந்த முப்பெருந்தேவியர்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியில் கொலு என்ற நிகழ்வின் ஒன்பதாம் நாள் நவராத்திரி விழாவாக சரஸ்வதிபூஜை கொண்டாடப்பட்டது விழாவில் அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியர் வேடமிட்டு வந்திருந்த குழந்தைகள் காண்போரின் கவனத்தை ஈர்த்தனர்.
மேலும் பள்ளியில் இசை ஆசிரியை இலக்கியா ஸ்ரீ ஒருங்கிணைத்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வைப் பற்றி பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறும்போது கல்வியா, செல்வமா, வீரமா என்று தனித்தனியே நோக்காமல் இந்த மூன்று வளங்களும் ஒருங்கே அமையப்பெற்ற மனித வாழ்க்கைதான் சிறக்கும். குழந்தைகளுக்கு இந்த செய்திகளை எல்லாம் அறிவிக்கவே இது மாதிரி விழாக்களை பள்ளியில் தொடர்ந்து நடத்துகிறோம் என்றார். நிகழ்வில் பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, நிர்வாக இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல், கவிஞர் நாகா அதியன், வழக்கறிஞர் செந்தில்குமார், பேராசிரியர் கருப்பையா, கல்வித்துறை கணேஷ், ஒருங்கிணைப்பாளர் கௌரி உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 − = 80