சபரிமலையில் ஸ்வாமி தரிசன நேரம் நீடித்தது தேவசம்போர்டு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை, மாலை ஸ்வாமி தரிசனம் செய்யும் நேரத்தை நீடித்து தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. அதே சமயத்தில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணியை தொடங்கினார்.

கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால், இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் 17ம் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கும் நடைதிறக்கப்படும் என தேவசம் போர்டு பக்தர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

35 − 29 =