சபரிமலையில் மண்டல பூஜைகள் தொடக்கம்; மழையையும் பொருட்படுத்தாமல் குவியும் பக்தர்கள்;தரிசனத்துக்கு வந்த பெண்மணியால் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகளுக்காக கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தொடங்கினர்.
அதிகாலை 1 மணிக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கனமழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். பக்தர்கள் பம்பையில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.


பெண்மணியால் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் செங்கனூர் ரயில் நிலையம் வந்த இளம்பெண், அங்கிருந்து பம்பை செல்லும் பஸ்சில் ஏறினார்.அவர் தரிசனத்துக்கு செல்வதாக கூறியதால் பக்தர்கள் அவரை பஸ்சில் ஏறக்கூடாது என கூறினர்.

இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற செங்கனூர் போலீசார் அந்த பெண்ணை பம்பை செல்ல அனுமதிக்காமல் பஸ் நிலையத்தில் கொண்டு விட்டனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த பெண் சபரிமலை செல்லாமல் திருவனந்தபுரம் செல்லும் பஸ்சில் சென்றார்.இந்த சம்பவத்தால் நேற்று செங்கனூரில் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 45 = 53