சபரிமலையில் நடைதிறந்த முதல் நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

கொரோனா பிரச்னையால் கடந்த 2 ஆண்டாக கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டதால் நடை திறந்த முதல் நாளிலேயே பக்தர்கள் வருகை களைகட்டியது.

கார்த்திகை முதல் நாளான வியாழக்கிழமை 17ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் கோவிலுக்குச் செல்ல சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர். இதில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிலுக்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றனர். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து திரும்பினர். மேலும், முன்பதிவு செய்த நேரத்தில் வர முடியாதவர்கள் அன்று முழுவதும் ஏதாவது ஒரு நேரத்தில் வந்து தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படவில்லை.

சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 85 = 86