சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா

சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடைபெற்றது, இதில் கல்லூரியின் தாளாளர்  விஜயகுமார் தலைமை ஏற்க கல்லூரி முதல்வர் கே ஸ்ரீனிவாசன் துவக்க உரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி பிஷப் ஹிபர் கல்லூரியில் துணை முதல்வர் சத்தியசீலன் வருகை புரிந்திருந்தார், அவர் தன்னுடைய அசாத்திய திறமையான வயலின் வாசித்து விழாவை சிறப்பித்தார்.

மேலும் அவர் கூறுகையில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும் வாய்ப்புகள் வரும் அவற்றைப் பற்றிக் கொள்வதற்கான அறிவுரைகளையும் கூறி மாணவர்களை ஊக்குவித்தார், அனைவரின் மனதிலும் நிலைத்து நின்ற அவருடைய பேச்சை தொடர்ந்து விழா நாயகி பேராசிரியர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு மேலும் சிறப்பித்தார், முதலாம் ஆண்டு மாணவர்களுடன் விழாவிற்கு வந்திருந்த அனைத்து பெற்றோர்களும் மனமகிழ்வுடன் அவரது பேச்சைக் கேட்டனர். பற்பல நிகழ்வுகளை கூறி மாணவர்களை ஊக்குவித்த அவர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மிகவும் ஊக்குவிக்கும் வகையில் எவ்வாறு வாழ்வில் முன்னேற வேண்டும் எவ்வாறு வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்றும் வாழ்வில் மென்மேலும் முன்னேற பல வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

சாதிப்பதற்கு வயதும் கல்வியும் திறமையும் அறிவும் தாண்டி நம் ஆழ்மனதில் நாம் வெற்றியடைய வேண்டும் என்ற சிந்தனை நிலைத்து நிற்க வேண்டும் என்பதை மிக அழகாக கூறினார்.

விழாவிற்கு தலைமை தாங்கிய கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ வி கே சுந்தரம் அவரது துணைவியார் ஸ்ரீமதி இராஜி சுந்தரம், இவ்விழாவினை சிறப்பிக்கும் விதமாக வருகை புரிந்த நிறுவன உறுப்பினர்கள் விஸ்வநாதன், ராமசந்திரன், ராதாகிருஷ்ணன், பாலசுப்ரமணியன் மற்றும் அம்பி வென்சர்ஸ் சி.இ.ஓ. பிரதிப் குமார் முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளை வாழ்த்தினர். பின்னர் முதலாம் ஆண்டு மாணவ சேர்க்கை அதிகாரி ஹேமலதா நன்றியுரை ஆற்றினார்.