காரைகுடியை சேர்ந்த சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு ரூ.1 லட்சம் பரிசை கலெக்டர் மதுசூதன்ரெட்டி இன்று வழங்கினார்.
சதுரங்க விளையாட்டில் ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று காரைக்குடி திரும்பிய வித்யாகிரி பள்ளி மாணவன் பிரனேஷ்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வித்யாகிரி பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை காண காசோலையை வழங்கி கிராண்ட் மாஸ்டர் பிரனேசுக்கு தலையில் கிரீடம் சூட்டி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி குழு தலைவர் கிருஷ்ணன், தாளாளர் முனைவர் ஆர். சுவாமிநாதன், பொருளாளர் மற்றும் புதுவயல் பேரூராட்சி தலைவர் ஹாஜி முஹம்மது மீரா, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ரவி, காரைக்குடி நகர்மன்ற தலைவர் எஸ். முத்து துரை, காரைக்குடி வித்யா கிரி பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன், நிகழ்ச்சி தொகுப்பாளர் நல்லாசிரியர் ஜெயம்கொண்டான், மேலாளர் ராஜ சேகர், சதுரங்க சீனியர் பயிற்சியாளர் அதுலன், பிரனேஷின் தாய்_தந்தை முனிரத்தினம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.