சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் ஆவுடையாள்புரம் கிராமத்தில் சூறாவளிக் காற்றால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மறைந்த தங்கவேல் குடும்பத்தினர் மற்றும் வீடு இடிந்து பரிதாப நிலையில் உள்ள பெருமாள், வள்ளிமுத்து ஆகியோர் வீட்டிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பெரியதுரை தலைமையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா வீட்டிற்கு நேரில் சென்று மறைந்த தங்கவேல் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரூ10ஆயிரம் நிதியும், சூறாவளி காற்றால் வீடு இழந்த பெருமாள் மற்றும் வள்ளிமுத்து ஆகியோர்களுக்கு 5000 ரூபாயும் வழங்கினார்.
இதில் சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மருதன்கிணறு ஊராட்சி மன்றத் தலைவர் தங்கதுரை, ஆவுடையார்புரம் கிளைக் திமுக செயலாளர் முத்தரசு, வன்னியம்பட்டி சுவாமிதாஸ், மாதவன், ரமேஷ், குரல்வட்டி கிளைக் திமுக செயலாளர் சுகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.