
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சங்கரன்கோவில் தொகுதி சங்கரன்கோவில் கோட்ட மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதில் சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் மின்வாரிய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் சங்கரன்கோவிலில் மின் தேவையை பூர்த்தி செய்ய புதிய உப மின் நிலையம் அமைக்க இடம் ஏற்பாடு செய்து தருமாறு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை கேட்டுக் கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கொண்டு சென்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் மேலும் இந்த கூட்டத்தில் சங்கரன் கோவில் தொகுதியில் மின்வாரியம் மூலம் நடைபெற்று வரும் பணிகள் நடந்து முடிந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கேட்டறிந்தார், தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதில் சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், கிராமப்புற உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், நகர்ப்புற உதவி செயற்பொறியாளர் ரவிராமதாஸ் திருநெல்வேலி மாவட்டம் மின்வாரிய குறைதீர் மன்ற உறுப்பினர் வக்கீல் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.