தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மேல நீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் கோமருதப்பபுரம் ஊராட்சிக்குட்பட்ட நவநீதகிருஷ்ணாபுரத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார்.
இதில் அவைத்தலைவர் பரமையா, ஒன்றிய துணைச் செயலாளர் சின்னக்குருசாமி, சந்திரசேகரன் ,மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், செந்தூர்ப்பாண்டியன், பொருளாளர் முத்துப்பாண்டியன், வர்த்தக அணி செந்தில்குமார், வக்கீல் அணி தனசேகரன், அய்யாதுரை மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.