சங்கரன்கோவில் அரசு ஆண்கள் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  70 ஆவது பிறந்த நாளையொட்டி பெண்களுக்கான கபாடி போட்டி

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் 70ஆவதுபிறந்த நாளையொட்டி பெண்களுக்கான கபாடி போட்டி நடைபெற்றது, வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ  ராஜா தலைமை வகித்தார், யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன் ,மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, மாவட்ட பொருளாளர் சரவணன், முன்னாள் எம்பி விஜிலா, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை,  பூசைபாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா சௌந்தர பாண்டியன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார், இதில் பல்வேறு  பகுதிகளிலும் இருந்து 18 அணிகள் போட்டியில் பங்கேற்றன, இதில் ஆலங்குளம் காலத்திமடம் அணி  3ம் இடமும், சேரன்மாதேவி ஏவிஎஸ் கபாடி குழு 2ம் இடமும் ,குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும் பெற்றது. இதில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.15000, 2ம் இடம் பெற்ற அணிக்கு ரூபாய் 10,000 மும், 3 மற்றும் 4ம் இடங்களை பிடித்த அணிகளுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டது. இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி ,இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்தி,  உதயகுமார், மாவட்ட உடற்கல்வி இயக்குனர் நாராயணன், திமுக நகரத் துணைச் செயலாளர்கள் கேஎஸ்எஸ்.மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம்,  காளிசாமி மற்றும் பிரகாஷ் ஜெயக்குமார், கேபிள்கணேசன், முருகன், வைரவேல் ,குமார், கோமதிசங்கர், பிரபாகரன் மற்றும் நகர திமுக நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

65 − = 56