தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1 அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் லாலா சங்கரபாண்டியன், மதிமாரிமுத்து, சேர்மதுரை, நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி, சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா கலந்து கொண்டு அரசு மருத்துவமனையில் முதல்வர் பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கினார்.
இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், இளைஞர் அணி சரவணன், மாணவரணி உதயகுமார், கார்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜ், மூத்த உறுப்பினர் சந்திரன், வார்டு செயலாளர்கள் தங்கவேல், துரைபாண்டியன், காளிச்சாமி, பாண்டியன், கணேசன், வைரவேல், சதாசிவம் ,செந்தில்குமார், சுப்பிரமணியன், மாரிராஜ், ஆறுமுகம், சங்கரன், வீராசாமி, வீரமணி, தடிகாரன், சரவணன், முத்துக்குமார், கோமதிநாயகம், மாரியப்பன், சுப்பராஜ், ஆறுமுகம் மற்றும் கேபிள் கணேசன், அன்சாரி, சபரிநாத், தாஸ், ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.