கோவில் வழிபாடுகளில் ஜாதி, நம்பிக்கை, நிற பாகுபாடு கூடாது: உயர்நீதிமன்றம்

கோவில் வழிபாடுகளில், ஜாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அய்யனார், கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு கூறியதாவது, கோவில் வழிபாடுகளில் ஜாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது.

அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டு தலம் கோயில். கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு.வழிபாட்டில் பாகுபாடு பார்த்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =