கோவில்பட்டி அருள்மிகு ஆத்தாள் தேவி மஹா திரிசூல பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது

கோவில்பட்டி அருள்மிகு ஆத்தாள் தேவி மஹா திரிசூல பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை கோலாகலமாக நடைபெறுகிறது.

புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சார்ந்த ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை கோகர்னேஸ்வரர் ஆலயத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி அருள்மிகு ஆத்தாள் தேவி மஹா ஸ்ரீ திரிசூல பிடாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா செப்டம்பர் 7ஆம் தேதியான புதன்கிழமை நாளை காலை 9.15 முதல் 10.15-க்குள் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மதியம் 11 மணியளவில் அறுசுவை அன்னதானம் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். இரவு 9 மணி அளவில் தொண்டி கலைவேந்தன் கார்த்திகேயன் வழங்கும் காண பறவை தெம்மாங்கு இசை நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து வான வேடிக்கை மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பக்த கோடிகள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஸ்ரீ திரிசூலம் பிடாரியம்மன் அறக்கட்டளை கோவில்பட்டி மற்றும் பொதுமக்கள் ஆன்மீக அன்பர்கள் அழைக்கின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

79 − 71 =