கோவிலை உரிமை கோரிய இரு தரப்பினர் அறநிலைத்துறை அதிரடி முடிவு வேப்பிலையுடன் பெண்கள் சாமியாட்டம் அறந்தாங்கி அருகே பரபரப்பு

அறந்தாங்கி அருகே மாங்குடி முத்துமாரியம்மன் கோவிலில் உரிமை கோருவது தொடர்பாக இருதரப்பினருடையே மோதல்,கோயிலை கையகப்படுத்த வந்த இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு, சாமி ஆடிய பெண்களால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மாங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் அதனைச் சுற்றியுள்ள மாங்குடி,இடைவிரியேந்தல், சேதுராயனேந்தல் கொன்னாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் வைகாசி மாதத்திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் உரிமை கோருவது தொடர்பாக கோவில் நிர்வாகி ரெங்கசாமி தரப்பினருக்கும், சுந்தர்ராஜ்  தரப்பினருக்கும் மோதல் இருந்து வருகிறது.மோதலால் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. மேலும் இது தொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அறந்தாங்கி வட்டாச்சியர் அலுவலகத்தில் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து இரு தரப்பும் கலைந்து சென்றனர்.  இந்நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்ப்பட்டுள்ள மோதலைத் தடுக்க இந்து சமய அறநிலையதுறை சார்பில் கோயிலை கையகப்படுத்தும் முயற்ச்சி மேற்க்கொள்ளப்பட்டது. அதற்காக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது அங்கே காத்திருந்த கிராம மக்கள் 200க்கும் மேற்ப்பட்டோர் இரு தரப்புக்கும் உள்ள கருத்து வேறுபாட்டால் கோயிலை அறநிலையத்துறைக்கு ஒப்படைக்க முடியாது  என்று கூறி, அதிகாரிகளை உள்ளே விடாமல் கோவில் கோபுரத்தில் ஏறியும் கோயில்  முன்பாக முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது 10க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் வேப்பிலையுடன் அருள் வந்து சாமியாடிதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தினை தொடர்ந்து கிராமத்தில் பதற்றம் நீடித்ததால் காவல்த்துணைக்கண்காணிப்பாளர் தினேஷ் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,10 தினங்களுக்குள் நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கும் வரை,கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 3