கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது நடவடிக்கை: சட்டமசோதா தாக்கல்!!!

கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார்.

இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட முடியும். அவர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்க முடியாது. இதனால் பல இடங்களில் கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாக நடைபெற்று வருவதை பார்க்க முடிகிறது. இதனால் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக சட்ட மசோதாவை இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தாக்கல் செய்கிறார்.

இன்று தாக்கல் செய்யப்படும் மசோதாவால் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்து ஜாமீனில் விட முடியாத அளவுக்கு சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

93 − 85 =