கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 8-வது குற்றவாளியான சந்தோஷ் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 8-வது குற்றவாளியான சந்தோஷ் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உட்பட 11 பேரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோடநாடு சம்பவம் நடந்த பகுதியில் பதிவான தொலைபேசி பதிவு ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸ் ஏற்கனவே சேகரித்தது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 8-வது குற்றவாளியான சந்தோஷ் சாமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சந்தோஷ் சாமி கேரளாவைச் சேர்ந்த பூசாரி ஆவார்.