கோடநாடு எஸ்டேட் சிசிடிவி கணினி ஆபரேட்டர் மரணம் – விசாரணை மீண்டும் தொடக்கம்!!!

கோடநாடு எஸ்டேட் ஊழியர் மரணம் தொடர்பாக தனிப்படை மீண்டும் விசாரணையை தொடங்கியது.

கோடநாடு எஸ்டேட் சிசிடிவி கணினி ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக கோத்தகிரி அருகே கொங்கரை கிராமத்தில் தினேஷ்குமார் தந்தை போஜனிடம்  தனிப்படை 3 மணி நேரம் விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையில் தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் தனிப்படையினரால் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையின் போது தற்கொலைக்கான காரணம் என்னவென்று எங்களுக்கு எதுவும் தெரியாது என்று தந்தை போஜன் தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் பல்வேறு ரகசிய தகவல்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகக் கூறி கோத்தகிரி காவல் துறையினர் கடந்த மாதம் உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  கூடுதல் விசாரணை செய்ய அனுமதிக்கோரி மனுதாக்கல் செய்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணை மேற்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக தனிப்படை போலீசார் இந்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கனகராஜின் மனைவி மற்றும் சகோதரர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொழில் ரீதியாக பழகியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் நேற்று இரவு தனிப்படை போலீசார் தினேஷின் சொந்த ஊரான செங்கரை கிராமத்திற்கு சென்று அவரது தந்தை போஜனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் திடுக்கிடும் பல தகவல்கள் கிடைக்கும் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 8 =