கொலம்பியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்தது: 8 பேர் பலி!

கொலம்பியா, மத்திய கொலம்பியாவின் ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரம் செயலிழந்து அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி நொறுங்கியது.

விபத்துக்குள்ளான விமானம் காற்றில் அடர்த்தியான கரும் புகையை உமிழ்ந்த வண்ணம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில், விமானத்தில் இருந்த ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் இறந்ததாக அறிவித்தது.

இவ்விபத்தில் ஏழு குடியிருப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு கட்டிடங்கள் சேதமடைந்தன. வீட்டில் யாரேனும் காயமடைந்தார்களா? அல்லது இறந்தார்களா? என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சிறிய ரக விமானம் டேக்ஆப் செய்யும் போது இன்ஜின் செயலிழப்பைக் காட்டியுள்ளது. இதனால், ஓலயா ஹெர்ரெரா விமான நிலையத்திற்குத் திரும்ப முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 43 = 46