கொரோனா 3வது அலை : குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை – மருத்துவர் திரேன் குப்தா

கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையின் குழந்தைகள் நுரையீரல் நிபுணர் மருத்துவர் திரேன் குப்தா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. அதனால், குழந்தைகள் கொரோனா 3வது அலையில் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவில் கொரோனா 3வது அலை வரும் அக்டோபரில் உச்சம் தொடும் என தேசிய பேரிடர் மேலாண் மையம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.  மேலும் பல்வேறு நிபுணர்கள் மற்றும் மருத்துவக்குழுக்களும் கொரோனா 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ள நிலையில், தற்போது மருத்துவர் திரேன் குப்தா குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

62 − = 59