கொரோனா மற்றும் பருவ காலங்களில் காற்றினால் பரவும் நோயினை தடுக்க ஆனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் கூறி பொதுமக்களுக்கு முகக்கவசத்தை இந்திய மருத்துவ சங்க கிளை தலைவர் வழங்கினார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் புதுக்கோட்டை கிளையின் தலைவர் டாக்டர் சுவாமிநாதன் பொதுமக்களிடம் கொரோனா மற்றும் பருவ காலங்களில் காற்றினால் பரவும் நோயினை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறியதோடு முகக்கவசம் அணிய வேண்டும்.என வலியுறுத்தினார் இனி வரும் காலங்களில் முகக்கவசம் அணிந்தால் தும்மல், இருமல் போன்ற தொற்று உபாதைகள் அடுத்தவர்களுக்கு பரவாமலும் கொரோனா போன்ற நோய்களும் வராது தடுத்து கொள்ளலாம். எனவே பொது இடங்கள், நெரிசலான இடங்கள், பேருந்து பயணம் மற்றும் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றதோடு பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார். நிகழ்வில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், மேலாளர் வீரமுத்து, புதுக்கோட்டை சதுரங்க கழக பயிற்சியாளர் மா .செல்வம், சமூக ஆர்வலர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
