கொரோனா மற்றும் கன மழையினால் பாதிக்கப்பட்ட கலைக் கூத்தாடிகளுக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் நிவாரணம்

உளுந்தூர்பேட்டை அருகே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 65 கலைக் கூத்தாடிகள் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் அரிசி, மளிகை மற்றும் காய்கறி பொருட்களை நிவாரணமாக வழங்கினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தில் 65 கலைக்கூத்தாடி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இவர்கள்  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  நோய்த்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்ததாலும், அண்மையில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் தொடர்ந்து   பெய்து வந்ததாலும், கலைக்கூத்தாடிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, போதிய உணவு வசதி இல்லாமல் குழந்தைகளுடன்  கடுமையாக பாதிக்கப்பட்டு  அவதிக்கு உள்ளாகி வந்தனர், 

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் 29-ஆம்  ஆண்டு கலையுலக பயணத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், மாவட்ட தலைவர் பரணிபாலாஜி தலைமையில், வெள்ளையூரில் வசித்து வரும் 65 கலைக்கூத்தாடி குடும்பத்தினற்கு தேவையான ஒரு மூட்டை அரிசி, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவை அடங்கிய சிறப்பு தொகுப்பினை நிவாரணமாக வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன் , ஒன்றிய நிர்வாகிகள் சக்திவேல், சுபாஷ், பெரியசாமி, கண்ணன், மெர்சல் கார்த்திக், பாரதிராஜா, சந்துரு விஜய் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட கலை கூத்தாடி குடும்பத்தினர்கள் உளுந்தூர்பேட்டை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் இன்முகத்துடன் நன்றியை தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

80 + = 87