கொடைக்கானலில் ரோட்டரி மாவட்டம் 3000-த்தின் சார்பாக 2021-22ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா

ரோட்டரி மாவட்டம் 3000த்தின் சார்பாக 2021-22ஆம் ஆண்டிற்கான சிறப்பாக செயல்பட்ட ரோட்டரி சங்கங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கொடைக்கானலில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ரோட்டரி மாவட்ட ஆளுனர் ஜெயக்கண் தலைமை தாங்கினார். மாவட்ட பயிற்றுனர் ஜமீர் பாட்ஷா, ரோட்டரி ஆளுனர் நியமனம் தேர்வு ராஜா கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்த ரோட்டரி ஆண்டில் மிகச்சிறப்பாக பணியாற்றிய புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்திற்கு மாவட்டத்திலேயே உயரிய விருதான சூப்பர் ஸ்டார் தலைவர் விருது சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ்க்கு வழங்கப்பட்டது. அதோடு சிறந்த தலைவர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த செயலாளர் விருது கார்த்திகேயனுக்கும், மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, துணை ஆளுனர் சிவாஜி ஆகியோர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ரோட்டரி உறுப்பினருக்கன விருதுகளை அந்தோணிசாமி, ஜெய்சன் கீர்த்தி, ஜெயபாரதன், சிவாஜி, ஓவியர் ரவி, ஜெகதீஸ்வரன், வைத்தீஸ்வரன் ஆகியோர் பெற்றனர்.

சங்கத்திற்கான சிறந்த சங்கப்பணி, சிறந்த பன்னாட்டு பணி, இரத்ததான முகாம், சிறந்த சங்க இதழ், மக்கள் நன்மதிப்பு, உறுப்பினர் வளர்ச்சி, சமூகப்பணி, வெள்ளிவிழா விருது, தொடர் திட்டங்களுக்கான விருது, கோவிட் நிவாரணப் பணிகளுக்கான விருது, மருத்துவ திட்டங்களுக்கான விருது, தாய்ப்பால் விழிப்புணர்வு விருது உள்ளிட்ட 37 விருதுகள் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை ரோட்டரி ஆளுனர் டாக்டர்.ஜெயக்கண் வழங்க புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பெர்லின் தாமஸ், செயலாளர் கார்த்திகேயன், மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி, பொருளாளர் கதிரேசன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1