கொடைக்கானலில் கடும் குளிர் மற்றும் உறை பனி சீசன் துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிர் நிலவும். ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்ததின் காரணமாக குளிர் சீசன் சற்று தாமதமாக தொடங்கியது. கடந்த மாதத்தில் அவ்வப்போது சாரல் மழையும் மேகமூட்டங்களும் நிலவியதால் குளிர் குறைந்து பொதுமக்கள் பாதிக்காத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மீண்டும் குளிரின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனிடையே ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் உறை பனி ஏற்பட்டது. குறிப்பாக  காலையில் மூஞ்சிக்கல் பகுதியில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும், ஏரிச்சாலையில் 6 டிகிரி ஆகவும் காணப்பட்டது, இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் காலநிலையை அனுபவித்து வருகிறார்கள்.

கடும் குளிர் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து வருகிறது, குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர், நடைபயிற்சி செல்பவர்களும் பாதுகாப்பான உடைகளை அணிந்து நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். வரும் நாட்களில் உறைபனியின் தாக்கம் மைனஸ் டிகிரி ஆகவும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 15 =