
கோடநாடு விவகாரம் தொடர்பாக கவர்னர் பன்வாரிலாலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து இன்று மனு அளித்தனர்.

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளியான சயானிடம் நேற்று முன்தினம்(ஆக.,17) போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இது நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. இவ்விவகாரத்தில், பொய் வழக்கு போடுவதாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து பேசினர். அப்போது, கோடநாடு விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்ததுடன், அதில், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் சட்டசபை கூட்டத்தில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியே வந்தவுடன் அவைக்கு வெளியே அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர் இன்றும் அவர்கள் அறைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.