கொசவன்பேட்டையில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது – புழல் சிறையில் அடைப்பு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை ஊராட்சி, அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் எஸ்.ஐ., திருமுருகன் தலைமையில், போலீசார் ராஜி, தமிழரசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். போலீசார் அவர்களிடம் துருவித்துருவி விசாரணை செய்தபோது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது22), அஞ்சாத்தம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பூபதி (வயது19) என்பதும் அவர்கள் கஞ்சா பொட்டலங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விற்பனை செய்வதையும் ஒப்புக்கொண்டனர்.

போலீசார், மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 6 = 2