கைதிகளை விடுவிக்க, 6 பில்லியன் டாலர் பணத்தை ரிலீஸ் செய்ய ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் அமெரிக்காவும் ஈரானியர்களை சிறைபிடித்துள்ளது.

இவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய அமெரிக்கா- ஈரான் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் உள்ள ஐந்து அமெரிக்கர்கள் சிறையில் இருநது விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரை அமெரிக்கா விடுதலை செய்ய இருக்கிறது. மேலும், தென்கொரியாவில் இருந்து கத்தாருக்கு 6 பில்லியன் அமெரிக்க டாலரை மாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்டன் கடந்த வாரமே கையெழுத்திட்ட நிலையில், நேற்று தான் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க துருப்புகள் மற்றம் அவற்றின் துணை நாடு துருப்புகளை ஈரான் மத்திய கிழக்கு கடற்கரை பகுதியில் அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரானின் பொருளாதாரத்திற்கு இது கூடுதல் உதவியாக இருக்கும் என எதிர்க்கட்சி ஜோ பைடன் அரசை விமர்சிக்கும என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தென்கொரியா- கத்தார் மத்திய வங்கி பண பரிமாற்ற அனுமதி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசிய வங்கிகள் தொடர்பான அமெரிக்காவின் தடையை மீறியதாகாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மனிதாபிமான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.