கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 18-வது விளையாட்டு விழா

கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 18-வது விளையாட்டு விழா மிகச்சிறப்பாக நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நிறுவனங்களின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். தாளாளர் லியோ பெலிக்ஸ் லூயிஸ், நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர் குமுதா, முதல்வர் கவிதா, மக்கள் கவிஞர் மு.பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், கேடயத்தையும் வழங்கி பேசியது,

பெண்கள் காவல்துறை பணிக்கு வருவதற்கு தயங்கினர். ஆனால் இப்போது அதிகளவில் நம்துறையில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இத்துறையை எடுத்துக் கொண்டால் நம் தேசத்திற்கும் நாம் செய்யும் சேவை தான் என்று எண்ண வேண்டும். விளையாட்டுக்கும், காவல் துறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக விளையாட்டு வீராங்கனைகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு எறிபந்து, கோ-கோ, கபடி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல். நீளம் தாண்டுதல். 800 மீட்டர் ஒட்டப்பந்தயம், தொடர் ஒட்டப்பந்தயம் போன்றவைகள் நடைபெற்றன. இதில் தனிநபர் கோப்பையை இளநிலைப்பிரிவில் கின்னா சுவாதியும், முதுநிலைப்பிரிவில் கனகபிரியாவும் கைப்பற்றினர்.

ஒட்டுமொத்தமாக இளநிலைப்பிரிவில் மஞ்சள் அணியினரும். முதுநிலைப்பிரிவில் ப்ரவுன் நிற அணியும் வெற்றிவாகை சூடி சுழற்கோப்பையை கைப்பற்றினர். முன்னதாக உடற்கல்வி இயக்குநர் மைக்கேல் கிளாரா, விளையாட்டுத்துறை அறிக்கையினை சமர்பித்தார். தமிழ்த்துறை தலைவர் பூர்ணிமா வரவேற்றார், உதவிப் பேராசிரியர் சிவரஞ்சனி தொகுத்தளித்தார். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =