கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்லூரி நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர்களுக்கு, ஆசிரியர் செம்மல் விருது

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில், சென்னை டாக்டர் இராதாகிருஷ்ணன் வாழ்ந்த இல்லத்தில் ‘ஆசிரியர் செம்மல்’ விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இதில் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முன்னாள் ஆங்கில துறைத்தலைவர், இயக்குநர் முனைவர் மா,குமுதா, கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.சந்திரமோகன் ஆகியோர் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) பி.என்.பிரகாஷிடம் இருந்து விருதை பெற்றனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சோ.ஆறுமுகம், தமிழக கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.பெரியண்ணன,; ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேவைச் செம்மல் ம.முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  விருது பெற்றவர்களை ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன், செயலர் எல்.தாவூத் கனி, நிர்வாக அறங்காவலர், முதல்வர், உதவிப்பேராசிரியர், மாணவியர், அலுவலகப் பணியாளர் ஆகியோர்கள் வாழ்த்தினர்.