கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தின விழா கொண்டாட்டம் மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதல்வர் செ.கவிதா, பட்டிமன்ற பேச்சாளர் மு.பா ஆகியோர் முன்னிலை வகித்தனர், விழாவில் சிறப்பு விருந்தினராக வாசகர் பேரவையின் செயலர், முன்னாள் அரசுக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் சா.விஸ்வநாதன் கலந்து கொண்டு விவேகானந்தர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது,
விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கொடுங்கள் நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் சுவாமிகள், யார் அவர் விரும்பிய இளைஞர்கள்? அவர்கள் உண்மையில் தேசத்தை நேசிப்பவர்களாகவும், கோடான கோடி கல்வியறிவற்ற மக்களின் அறியான்மையை போக்கியவர்களாகவும், வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் மக்களின் துயரைப் போக்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
அதற்கு ஒவ்வொருவருக்கும் மூன்று விஷயங்கள் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அது மற்றவர்களின் துயரங்களை உணர்வதற்கான இதயம், துயரங்களைப் போக்க சிந்தனைத்திறனுள்ள மூளை, அவற்றைச் செயல்படுத்த வேலை செய்யும் கைகள். இந்த தேசிய இளைஞர் தினத்தில் விவேகானந்தரின் வேண்டுகொளை ஏற்று எழை, எளியவர்களுக்;கு உதவும் மனப்பாண்மையை வளர்த்துக் கொண்டு ஒப்பற்றவர்களாக நீங்கள் உயர வேண்டும் என்றார். நிகழ்ச்சியின் முன்னதாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் க.உஷாநந்தினி வரவேற்றார், முடிவில் பி.எல்.அன்பரசி நன்றி கூறினார்.