கேரளாவில் மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் பலி

வயநாடு அருகே சுற்றுலா சென்ற மாணவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாலக்காடு பகுதியை சேர்ந்த யாதவ் (18), மிதுன் (19), வயநாடு புல் பல்லியை சேர்ந்தவர் அனுப் (19) மற்றும் இவர்களுடன் மற்ற இரண்டு பேர் என ஐந்து பேரும் நேற்று காலை கல்பற்றாவிலிருந்து சுற்றுலா புறப்பட்டார்கள். அப்போது இவர்கள் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்கும் ஓடி பெரிய மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. காரில் இருந்த ஐந்து பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதுகுறித்து விவரம் அறிந்த கல்பற்ற போலீசரும் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். அப்போது மேற்கண்ட 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்ற இரண்டு மாணவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள். காவல் துறையினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் ஐந்து பேரும் பாலக்காட்டில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்கள். மேலும் விபத்து குறித்து போலீசார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =